பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்துப்பட்ட, சமூகங்களை அனைத்து துறைகளிலும் வலிமைப்படுத்துவதை நோக்கமாக கொண்டு, அனைத்து ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்துப்பட்ட, சமூகங்களை கைகோர்த்து தொலை நோக்கு பார்வையுடன் ஜனநாயக கோட்பாடுகளுக்குட்பட்டு ஒரு சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்க்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. பாப்புலர் ஃப்ரண்ட் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகச் சேவைகள், சமூக மேம்பாடு, சமுதாய விழிப்புணர்வு, மக்கள் போராட்டம், மனித உரிமை தளம், சட்டக்களம், ஊடகம் என அனைத்து தளங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2001ல் மனித நீதி பாசறை (MNP) யாகவும், 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என பரிணமித்து இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மணிப்பூர், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா என 9 மாநிலங்களில் செயல்படும் ஒரு தேசிய இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது.

தொழுகை மிகச் சிறந்த யோகா என்பதில் ஐயமில்லை :நாராயண் ஷெட்டி

முஸ்லிம்களின் தொழுகை முறை சிறந்த யோகா இதனை இறைவனுக்காக முழுமையாக நேர்த்தியாக கடைபிடிக்கும்போது மிகச்சிறந்த யோகா கலையாகவும் பலனளிக்கும். யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில் அமைந்திருக்கிறது என பதஞ்சலி யோகா சமிதியின் நாராயண் ஷெட்டி அவர்கள் கூறியுள்ளார். தெற்கு கன்னடா பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மங்களபுரம் ஸ்டேட் பேங்க் அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாரத்தான் ஓட்டம் மற்றும் யோகாசன பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. நாராயண் ஷெட்டியின் மாணவர் ஒருவர் யோகா கலையை செய்து காண்பித்தார் அதன் நன்மைகளை நாராயண் ஷெட்டி அவர்கள் தெளிவாக விளக்கினார்



ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யும் பாப்புலர் ஃப்ரண்டின் முயற்சிகளை வெகுவாக பாராட்டினார்.இறுதியில் தியானம் நடைபெற்றது.
அடுத்து பேசிய பாப்புலர் ஃப்ர்ண்டின் மாவட்ட தலைவர் அன்வர் சாதாத் அவர்கள் தேசிய அளவில் 16 மாநிலங்களில் இது போன்றதொரு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆர்வமுள்ள அனைவரும் இதில் பங்கு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.



பிறப்பின் அடிப்படையில் மனிதர்களியடையே எந்த வேறுபாடுமில்லை அதனை சாதிமதங்கள் பெயரால் மனிதர்கள் தான் உருவாக்கிவிட்டனர். இந்திய சமூகத்தில் இந்த ஏற்றத்தாழ்வுகளை களைய மன ஆரோக்கியமுள்ள மனிதர்கள் அவசியம். உடல் ஆரோக்கியமுள்ளவர்களுக்கே மன ஆரோக்கியமும் கிட்டும். அந்த வகையில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குறியது, என நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் மாரத்தானை தொடங்கிவைத்தவருமான மங்களபுரம் அலாய்சியஸ் கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்கள். வருமுன் காப்பதே சிறந்தது என்ற பழமொழியை சுட்டிக்காட்டிய அவர் இந்திய கலாச்சாரத்தின் யோகா கலை மற்றும் தியானத்தை பயின்று மருத்துவர்களிடம் செலவளிப்பதை தவிர்க்கலாம் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக மாவட்ட அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் இம்தியாஸ் பண்ட்வால் மாவட்ட சேம்பியனாக அறிவிக்கப்பட்டார்.



ரோஹிதாக்ஷா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ரஜாக் கெம்மாரா அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார் ஒருங்கிணைப்பாளராக நசீர் தும்பெ அவர்களும்